என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தருமபுரி மாணவி உயிரிழப்பு"
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர் இழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட உண்மையை அறியும் வகையில், முன்னாள் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா தலைமையிலான குழு கள ஆய்வு மேற்கொள்ள சிட்லிங் மலை கிராமத்திற்கு வந்தனர்.
இந்த உண்மையறியும் குழுவின் நோக்கம், தொடர்ந்து தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம், இவற்றில் இருந்து பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதலை தடுப்பது பற்றி ஒரு விரிவான உயர்மட்ட கள ஆய்வை மேற்கொள்வதாகும்.
இதில் முன்னாள் யுனிசெப் இயக்குநர் அருணா ரத்தினம், ஓய்வு பெற்ற தடயவியல் மருத்துவர் சேவியர் மற்றும் வழக்கறிஞர்கள் மார்ட்டின், கணேசன், ஹாலோசீஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடத்தில் தனி அறையில் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கோட்டப்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, விசாரணை அதிகாரி லட்சுமி ஆகியோரிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டனர். மாணவி தங்கியிருந்த தொப்பூர் குறிஞ்சி நகரில் உள்ள வள்ளலார் குழந்தைகள் நல காப்பகத்துக்கு சென்று காப்பக பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு ஆஸ்பத்திரி டீனை சந்தித்து மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை எப்படி நடந்தது என்பது குறித்தும் கேட்டனர்.
இது குறித்து ஒரு அறிக்கை தயாரித்து குழுவிடம் வழங்க இருப்பதை டீன் தெரிவித்தார். பின்னர் அந்த குழுவினர் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று விசாரணை நடத்த உள்ளனர். கலெக்டரை சந்தித்து பேச அனுமதியும் கேட்டு உள்ளனர். #dharmapurigirlmolestation
கம்பைநல்லூர்:
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு இந்த சோதனை நடந்தது. 5 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவியின் அண்ணன் முனீஸ்வரன் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தை அடிக்கடி மிரட்டுகிறார்கள். பகலிலும், இரவிலும் அடியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள். நீ வழக்கை எப்படி நடத்துவாய் என்று பார்க்கத்தான் போகிறோம் என்றும், நீ வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.
கைதான சதீஷ்குமாரின் தாயார் நேரில் வந்து என் குடும்பத்தை மிரட்டினார். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் என் மகனை ஜாமீனில் எடுத்து வந்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-
எங்கள் வீட்டுக்கு போலீசார் வந்தார்கள். வீட்டில் சோதனை நடத்தி எதையோ தேடினார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்னையும், என் கணவரையும் இடித்து தள்ளி விட்டு போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். கொலை செய்யப்பட்ட என் மகளின் பாஸ் புத்தகத்தை கேட்டனர். நான் கொடுக்க முடியாது என்றேன். அவர்கள் என்னை இடித்து தள்ளினர். நான் கீழே விழுந்து விட்டேன். எங்களை அவர்கள் மிரட்டினார்கள். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:-
மாணவி கொலை செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருகிறது. எங்கள் குடும்பத்தினரை கஷ்டப்படுத்துகிறார்கள். மாணவியின் சாவுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #dharmapurigirlstudent
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட சதீசுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து சதீசை நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மருத்துவ குழுவினர் செய்தனர்.
இந்த நிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
மேலும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். #dharmapurigirlstudent #girlmolested
கம்பைநல்லூர்:
அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் மாணவியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். #dinakaran #dharmapurigirl #molestation
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-
எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.
மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள். #dharmapurigirlstudent #girlmolested
தருமபுரி:
தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிட்லிங் பகுதியில் 16 வயதான சிறுமியை அந்த பகுதியை சேர்நத சதீஷ், ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து உள்ளார். கடந்த 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகு மறுநாள் (6-ந் தேதி) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் வாங்க மறுத்தது ஏன்? அன்றைக்கே நடவடிக்கை தொடங்கி இருந்தால் மாணவி உயிரிழப்பை தவிர்த்து இருக்க முடியும். இது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
7-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 3 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகுதான் 10-ந் தேதி காலை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.
இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், இது தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்